கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உலக புகழ் பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு உலக நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கிறார்கள். இது பஞ்சபூத தளங்களில் ஆகய தளமாகவும் விளங்குகிறது. சிவனை கருவறையில் உருவ வழிபாட்டுடன் வழிபடுவதால் சிவ பக்தர்களும் சைவர்களும் அதிகளவில் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இப்படி புகழ்மிக்க கோவிலின் வளாகத்தில் நடராஜர் சன்னதிக்கு அருகில் ஈசான மூலையில் ஸ்ரீஆதிமூலநாதருக்கு தனிக் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதனை காண பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு ஆயிரகணக்கில் வந்தனர். பின்னர் கோவிலின் மேல்தளத்திற்கு குடமுழக்கை பார்க்க தற்காலிக படிகள் அமைத்து அனுமதிக்கப்பட்டனர். குடமுழுக்கை பார்த்து வழிபட்ட பக்தர்கள் சிலர் கோவிலின் மீது இதுபோன்ற காலங்களில் தான் நம்மால் ஏறிபார்த்து ரசிக்கமுடியும் மற்ற நேரங்களில் இதனை பார்க்க முடியாது என்று என்னி கோவிலின் மேல் தளத்தை சுற்றிப் பார்த்து சுய படத்தையும், தங்கபொற்கூறை அருகே நின்று படம் எடுத்து மகிழ்ந்து கொண்டனர்.
அப்போது சிலர் கோவிலின் மேல் தளத்தை சுற்றிப்பார்த்தபோது, அங்கு மதுபாட்டிலை கிடப்பதைக் கண்டு முகம் சுளித்தனர். இதுகுறித்து அவர்கள் இந்த இடம் மிகவும் பாதுகாப்பானது. தீட்சிதர்கள் அனுமதி இல்லாமல் மேல் தளத்தில் ஏறமுடியாது. இரவில் கூட அர்தஜாம பூஜைகள் முடிந்து அனைத்து இடங்களையும் தீட்சிதர்கள் சுற்றி வந்து அனைவரையும் வெளியேற்றிவிட்டு இரவில் கோவிலுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். உலக மக்கள் போற்றி வணங்கும் சிவனின் மேல்தளத்தில் இப்படி கிடப்பது. வருத்தமாக உள்ளது என்று வேதனையை தெரிவித்தனர். மேலும் இங்க என்ன நடக்கிறது என்ற கேள்வியும் எழுப்பினார்கள்.
தீட்சிதர்கள் தரப்போ இது எப்படி வந்தது என்று தெரியவில்லை. விழா காலங்களில் கோவிலின் மேல்தளத்தில் வேலை செய்ய செல்பவர்களின் கெட்ட செயலாக கூட இருக்கும். எங்கு தவறு நடந்துள்ளது என்று விசாரணை செய்கிறோம் என்றார். இந்த செயல் எங்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்று கூறுகிறார்கள்.