செட்டிநாடு குழுமம் ரூபாய் 700 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட செட்டிநாடு குழுமமானது சிமெண்ட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், ஸ்டீல் உற்பத்தி, மின் உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வரி ஏய்ப்பு புகாரின் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான சென்னை, கோவை, திருச்சி மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் செட்டிநாடு குழுமம் ரூபாய் 700 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. மேலும் கணக்கில் வராத ரூபாய் 23 கோடியை பறிமுதல் செய்த அதிகாரிகள், செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமாக வெளிநாடுகளில் ரூபாய் 110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.