Published on 10/12/2018 | Edited on 10/12/2018
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடலில் அதன் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதுவடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும்.
இதன் காரணமாக தெற்கு வங்கக் கடல் பகுதி கொந்தளிப்பாக இருக்கக்கூடும். மீனவர்கள் தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னையைப் பொருத்தவரையில் வறண்ட வானிலையை காணப்படும். தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு குறிப்பிடும்படியான மழை இருக்காது. இவ்வாறு கூறியுள்ளார்.