Published on 24/06/2021 | Edited on 24/06/2021

அத்தியாவசியப் பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணித்துவந்தனர். இந்நிலையில், நாளைமுதல் (25.06.2021) மீண்டும் சென்னை புறநகர் ரயில் சேவை தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளைமுதல் சென்னை புறநகர் ரயிலில் மக்கள் பயணிக்கலாம். பெண்கள் அனைத்து நேரத்திலும் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம். ஆண்கள் நான் பீக் ஹவர்சில் மட்டுமே பயணிக்க முடியும். காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை, இரவு 7 மணிமுதல் கடைசி ரயில் செல்லும்வரை ஆண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை மின்சார ரயிலில் பெண்களுடன் மட்டுமே 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய வளாகத்தில் மாஸ்க் இல்லாமல் திரிந்தால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.