Skip to main content

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பள்ளிகள்..! (படங்கள்)

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

 

தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில், தமிழ்நாடு பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. 7,79,931 மாணவர்கள் கலந்துகொண்ட அந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

 

தேர்வு முடிவுகளின் படி, தமிழகம் முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதனைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணியில் பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. 

 

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் உள்ள லேடி சிவசாமி மற்றும் லேடி வெலிங்க்டன் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் நேற்றைய தினம் (27.07.2020) முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மேலும், அந்த நிகழ்வின்போது அப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்