Skip to main content

பாலியல் வழக்கில் காவல் ஆய்வாளர்... பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்த ஆணையர்.. 

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

Chennai police inspector suspended

 

 

சென்னையில் காவல் ஆய்வாளர் ஒருவர் 15 வயது சிறுமியிடம் தகாத உறவில் ஈடுபட்டு பலாத்காரம் செய்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெரு பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக கணவன் மனைவி உட்பட 10 பேரை கடந்த வாரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

இதில் மதன்குமார், வகிதா பானு ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்தபோது 15 வயது சிறுமியை வைத்து லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு கைது செய்யப்பட்ட 10 பேரும் பாலியல் தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையைத் தீவிரமாக்கியபோது வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் குடியிருக்கும் ராஜேந்திரன் என்பவரும் இதில் இருந்தது தெரியவந்து. அதனை தொடர்ந்து அவரை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, செப்டம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் எண்ணூர் காவல் ஆய்வாளரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

அதனை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தியை பணியிடை நீக்க செய்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்