சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கரோனா தொற்று பரவி வருவதால் மார்க்கெட் உட்பட அந்த சாலையில் உள்ள அனைத்துக் கடைக்களுக்கும் விதிமுறைகளை கடைப்பிடித்து வியாபாரம் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி அனுமதியளித்தனர். ஆனால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இடைவெளி கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாகக் கடைத்தெருவிற்கும் மார்க்கெட்டிற்கும் வந்துகொண்டிருந்தனர்.
இதனால் அப்பகுதியில் கரோனா வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகக் கூறிய அதிகாரிகள், இன்று முதல் அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளையும் உடனே இழுத்து மூடுமாறு அறிவித்தனர். பின்னர் எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் சாலையை இரும்பு தகரம் அடித்து முழுவதுமாக அடைத்தனர். இன்றிலிருந்து 15 நாட்கள் இந்தச் சாலையில் நுழைய தடை விதிக்கப்பட்துள்ளது. கடைகளும் 15 நாட்களுக்குத் திறக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியே வெறிச்சோடிக் காணப்பட்டது.