Skip to main content

“மிகவும் கனமழைக்கு வாய்ப்பு”- சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

இன்று காலையில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இதுவறை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

weather

 

 

இந்நிலையில் வானிலை குறித்து வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேசுகையில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

40ல் இருந்து 50 கி.மீ வரை காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். குறிப்பாக குமரி மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

கடந்த 24 மணிநேரங்களில் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மிக கனமழையும், எட்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்