Skip to main content

சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 19/10/2017 | Edited on 19/10/2017
சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!



சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் 6 மாதங்களுக்கு பிறகு தண்ணீர் வர துவங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் உள்ளன. வழக்கத்தை விட அதிகமாக பெய்த பருவமழையின் காரணமாக இந்த 4 ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. சுமார் 6 மாதங்கள் கழித்து 4 ஏரிகளின் நீர் இருப்பும் 1 டி.எம்.சி அளவை எட்டியுள்ளது.

இந்நிலையில் கால்வாய்களை தூர்வாரி வடகிழக்கு பருவமழை நீரை தேக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசு நீர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்தினால் மட்டுமே, கோடை கால தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்