Skip to main content

ரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றுவதா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


கரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக ரயில்பெட்டிகளை மாற்றுவதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கை நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்துதல் மற்றும் வார்டுகளாக மாற்றுவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதில், 5000 ரயில் பெட்டிகளை, தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ரயில்வே துறை அறிவிப்பில் 5000 ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றும் இலக்கில், 2500 பெட்டிகளை அவ்வாறு குறுகிய கால அவகாசத்தில் மாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

chennai high court corona wart railway government


இந்நிலையில், ரயில்கள் மற்றும் பணிமனைகள் ஏற்கனவே போதிய சுகாதாரம் இல்லாமல் இருக்கும் நிலையில், கரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக அவற்றை மாற்றக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், போதிய உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் இல்லாத இடங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்த போது, வழக்கு குறித்து ஏப்ரல் 9- ஆம் தேதி தமிழக அரசு மற்றும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்