Skip to main content

சுபஸ்ரீ மரண விவகாரம்: உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சுபஸ்ரீ மரண விவகாரத்தில் காற்றின் மீது தான் வழக்கு போட வேண்டும் என பேசுவதா? பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்ததற்காக ரூபாய் 1 கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை ரவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளனர்.  


இதற்கு தமிழக அரசு தரப்பு, பேனர் விவகாரத்தில் விசாரணை முழுமையாக முடிந்தது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தது. மேலும் சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல். சுபஸ்ரீ மரணத்துக்கு பின்னர் பேனர் வைக்க தமிழகத்தில் எந்த பகுதியிலும் அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

chennai flex issue subha shree high court judges speech



சீன அதிபரை போல மற்ற உலக தலைவர்கள் வந்தால் உலகமே சுத்தமாகிவிடும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சீன அதிபரின் வருகையால் சென்னை சுத்தமாகியுள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து. 
 

chennai flex issue subha shree high court judges speech


 

சார்ந்த செய்திகள்