Published on 02/05/2020 | Edited on 02/05/2020
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வந்த உளவுத்துறை காவலர்கள் இருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் புதுப்பேட்டை ஆயுதப்படை பெண் காவலர், ஓட்டேரி காவல் நிலைய காவலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் அனைவரும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுத்துறை அலுவலக கட்டுப்பாட்டு அறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.