திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வண்ணான்கோவில், ந.குட்டப்பட்டு, திருச்சி. ஊரில் 2009 தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது சாலையின் இருபுறமும் இரண்டு பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டன . ஆனால் அந்த பேருந்து நிறுத்தங்கள் தற்போது வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. நடு ரோட்டில் வண்டியை நிறுத்துவதால் பல விபத்துக்களால் பல பேர் உயிர் இழந்து உள்ளனர் நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் .
தேசிய நெடுஞ்சாலைதுறையினர் அமைத்து கொடுத்த பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் லோக்கல் ஆளும்கட்சியினர் துணையோடு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான வளர்மதி நிதியில் அதிகம் விபத்து நடக்கும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலை இடத்தில் புதிதாக மக்கள் வரிபணத்தை வீணடிக்கும் விதமாக கட்டுவதற்கு வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த சாலையில் பெரிய வாகனங்கள் திரும்புவதற்கும் விபத்துகள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கும் என்பதால் விபத்துக்கள் அதிகரித்து உயிர் இழப்புகள் அதிகமாகும் என்பதோடு தேசிய நெடுச்சாலையால் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் கமிஷனுக்காக புதிய பேருந்து நிறுத்தும் கட்டுகிறார்கள்.
உயிர் பலியாகும் பேருந்து நிறுத்தத்தில் அமைச்சர் உள்ளுர் நிதியில் புதிய பேருந்து நிறுத்தம் கொண்டுவருவது கமிஷனுக்காக மட்டுமே மக்கள் நலனுக்காக இல்லை என்பதால் அந்த பகுதி மக்கள் அந்த பேருந்து நிறுத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.