Skip to main content

மெரினாவுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை எப்போது நீங்கும்..? - சென்னை மாநகராட்சி பதில்!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020
ujhhj

 

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது.

 

தமிழகம் முழுவதும் இதுவரை 6.20 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 5.5 லட்சம் ஆக உள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,700 கடந்துள்ளது. இந்த பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட வரைமுறைக்குள் வரும் சில பொது இடங்கள் மட்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மக்கள் பெருவாரியாக கூடும் சில இடங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்