Skip to main content

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு:
வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்