Published on 29/06/2021 | Edited on 29/06/2021
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜூலை 3ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யலாம். நாளை (30.06.2021) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஐந்து சென்டிமீட்டர் மழையும், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.