தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிபேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி கோத்தகிரியில் 9 சென்டிமீட்டர் மழையும், குன்னூரில் 7 சென்டிமீட்டரும், சோத்துப்பாறையில் 6 சென்டிமீட்டரும், அலகாரியில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் அந்த ஐந்து மாவட்டங்களைத் தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பிற பகுதிகளிலும் நாளை (21.02.2021) மற்றும் நாளை மறுநாள் மிதமான பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.