![Chance of heavy rain in 11 districts today](http://image.nakkheeran.in/cdn/farfuture/C9XRYCJmFPIqx05RvL-xawOONiC8BrrmJeC7k3LQyiY/1697529262/sites/default/files/inline-images/rain-4_4.jpg)
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலைப் பொறுத்த வரையில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.