Skip to main content

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

fhg

 

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்