Skip to main content

''மோதிப் பார்...''-சவால் விடும் தளவாய் சுந்தரம்

Published on 13/10/2024 | Edited on 13/10/2024
admk

அ.தி.மு.க.வின் அமைப்புச் செ.வும், மா.செ., மற்றும் குமரி மாவட்டத்தின் எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகளை ஓவர் நைட்டில் எடப்பாடி திடீரென்று உருவியது அரசியல் உலகில் விவாதப் பொருளாகி விட்டது.

ஆகப் பெரிய ஜெயலலிதாவே, வில்லங்கமான தளவாய் சுந்தரத்தைப் பகைக்காமல், கட்சி மற்றும் நிர்வாகத்தில் அவரை சற்று தள்ளியே வைத்திருந்தார். ஆனால் எடப்பாடி, தளவாய் விஷயத்தில் களம் தெரியாமல் ஆடி விட்டார். பொறுப்புகளிலிருந்து அவரை விடுவித்ததால் தற்போது செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள்.

தென் மாவட்டத்தில் இலைக் கட்சியின் அந்த சீனியர் புள்ளியிடம் நாம் பேசியபோது, தளவாய் சுந்தரத்தை எடப்பாடி கட்சிப் பொறுப்புகளில் நீக்கியது பற்றிய முழுப் பின்னணிகளை விவரித்த அவர், இவர்களுக்குள் விவகாரம் தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பாகவே புகையத் தொடங்கியதைப் பற்றி விளக்கினார். ஆட்சி போன பின்பு அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ் வெளியேற்றப்பட்டு விட்டார். கட்சி தற்போதைய அ.தி.மு.க. பொ.செ.வான இ.பி.எஸ். வசம் இருந்தாலும், அவர் வசம் சீனியரான கே.பி.முனியசாமி உள்ளிட்ட சிலர் உள்ளனர். இவர்களில் கட்சி மற்றும் பிற விஷயங்களில் ஜாம்பவானான அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் எடப்பாடி சைடில் நின்றாலும், அவருடைய பாணியில் முரண்பட்டே நின்றிருக்கிறார். இதில் கட்சியின் எக்ஸ் அமைச்சர்கள் முக்கிய புள்ளிகளான ஆர்.பி.உதயகுமார், கடம்பூர்ராஜ், சேவூர் ராமச்சந்திரன், விஜயபாஸ்கர், மா.செ.இளங்கோ உள்ளிட்ட 13 பேர் எடப்பாடியிடம் ஒப்புக்கு அனுசரணையாகப் போனாலும், இவர்கள் தளவாய் சுந்தரத்தின் நம்பிக்கையான சகாக்கள். அவர்களும் தளவாயின் செல்பாடுகளை ஆதரிப்பதோடு கட்சியின் அசைக்க முடியாத தூணாகவும் உள் கூட்டணியாகவும் உள்ளனர். ஆனாலும் இந்த சிதம்பர ரகசியமெல்லாம் அறியாதவரல்ல எடப்பாடி. அவரால் இந்தக் கூட்டணியை பகைத்துக் கொள்ள முடியாத சூழல் இந்தக் கூட்டணி தளவாயிடம் விசுவாசமாக இருந்தாலும், எடப்பாடியை பகைத்துக் கொள்ளாமல் அவருடனும் உறவாடி வருவதுண்டு.

கடந்த மாதத்திற்கு முன்பு எடப்பாடியைச் சந்தித்த கட்சியின் அவரது விசுவாசிகள் தளவாய் கொஞ்சம் வில்லங்கமானவர். ஜெயலலிதா கூட அவரைத் தள்ளியே வைச்சிருந்தாக அவர் மீது ஏகப்பட்ட கம்பளைண்ட் கட்சிக்காரர்களை அவர் தப்பா புரிஞ்சிட்டிருக்கார் அதனால் நீங்க தளவாய் சுந்தரத்தை, கூட கார்ல கட்டிப் போறத குறைச்சுக்குங்க. என மந்திரம் ஓதியிருக்கிறார்கள். யோசிச்ச எடப்பாடியும், தளவாயை உடனழைத்துச் செல்வதைக் குறைக்கவே. விஷயம் தளவாய்க்குப் போக அவர் முகம் ஜிவ்வென்றாகி விட்டது.

சசிகலாகிட்ட நான் ரொம்பவே அழுத்தமாகச் சொல்லி எடப்பாடியை முதல்வரா கொண்டு வந்தவன் நான். நா இல்லாட்டா இவர் சி.எம் ஆயிருக்க முடியாது என்னால பதவியடைஞ்சவருன்னு குமரிப்பக்கம் தன் ஆதரவாளர்களிடம் கோபத்தில் வாய் திறந்திருக்கிறார் தளவாய். அவரின் இந்தப் பரப்புரையை குமரியில் உள்ள எடப்பாடி தரப்பு ஒன்று தளவாய் சொன்னதை அப்படியே ரீப்ளே செய்துவிட்டது. தன் காதுக்கு வந்த தகவலைக் கேட்டுக் கொதித்துப் போன எடப்பாடி, தளவாயைத் தொடர்பு கொண்டவர்.

என்னய்யா என்னையப் பத்தி ஊர் முழுக்கப் பேசுறீறாமே. என கடுப்பில் கேட்க தளவாய்க்கு ஆத்திரம் அதிலிருந்து இவர்களுக்குள் சரியான தொடர்பில்லாமல் போயிருக்கிறது.

nn

இந்த நேரத்தில் அனைத்து மா.செ.க்களையும் போனில் தொடர்பு கொண்ட எடப்பாடி செப். அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் திருமாவையும், நடிகர் விஜய்யையும் தாக்கிப் பேச வேண்டாம் என்று சொன்னவர், தளவாய் சுந்தரத்திடமும் இதைப் பேசியிருக்கிறார் ஏற்கனவே கடுப்பிலிருந்த தளவாய், இவர் என்ன சொல்லி, நாமென்ன கேட்கிறது என்று நாகர்கோயிலில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் திருமாவை ஒரு மணி நேரம் பிடி, பிடி எனப் பிடித்திருக்கிறார்.

இந்த தகவல் எடப்பாடிக்குப் போக அவர் கடுப்பாகி இருக்கிறார். நீங்க சொல்லியும் தளவாய் இவ்வளவு தாக்கிப் பேசியிருக்கிறார் என்று எடப்பாடியின் சகாக்கள் கடுப்பேத்த, எடப்பாடி தளவாய் சுந்தரத்திற்குமிடையே உள்ளுக்குள் மோதல். அதே சமயம் எடப்பாடியால் நம்மள என்ன செய்ய முடியும். என்ற தைரியத்தில் தான் தளவாய் சுந்தரம், குமரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கலந்து கொண்டு அதன் அணிவகுப்பைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஏற்கனவே எடப்பாடி, தளவாய் உரசல், ஆத்திரம், விளைவே கட்சிக்கோட்பாடு கொள்கைகளை மீறினார் தளவாய் சுந்தரம் அவரின் அமைப்பு செ. மற்றும் மா.செ. பொறுப்புகளிலிருந்து தளவாய் தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என்று எடப்பாடி திடீரென்று அறிவித்தது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. எடப்பாடியின் இந்த நவடிக்கைகளை தளவாய் சுந்தரம் ஒரு காரியமாகவே எடுத்துக் கொள்ள வில்லையாம். இதையடுத்து தளவாய் சுந்தரத்தின் அணியான கட்சியின் அந்த முன்னாள் மாண்புமிகுக்கள் கூட்டமாய் திரண்டு சென்று எடப்பாடியை சந்தித்தவர்கள்.

அவரைப் பதவியில் இருந்து எப்படி நீங்கள் தூக்கலாம் என்று எடப்பாடியிடமே குரலெழுப்பியவர்கள் அவரை மிரட்டுகிற வகையில் உள்ளுக்குள்ளேயே போர்க் கொடியை உயர்த்தியிருக்கிறார்கள் என்னடா நிலவரம் இப்படி போகுதேன்னு கலவரப்பட்ட எடப்பாடி அவர்களிடம் பொறுங்கப்பா. எடுத்த மதிரியே, எடுத்து பதவியத் திரும்பக் குடுத்திறேம்னு சொல்லியிருக்கிறார்.

எடப்பாடியிடம் தளவாய்க்காக இப்படி ஒங்கி குரலெழுப்பிய சகாக்கள், தளவாயிடம் எடப்பாடி சம்மதித்ததைத் தெரிவித்ததுடன், தளவாயைக் கிளப்பிவிடுகிற வகையில் அவரிடம், எடுத்த பதவியை எடப்பாடி திரும்பக் குடுத்தாலும், பதவி வேண்டாம் ஏத்துக்க முடியாதுன்னும், எம்.எல்.ஏ. பதவிய ராஜினாமா பண்ணப்போறேன்னு சொல்லுங்கண்ணேன்னு தளவாயை ஏற்றி விட்டுள்ளனர். சகாக்களின் டுவிஸ்ட் ரெண்டு பக்கமும் வேலை செய்ய, தளவாய் சுந்தரமோ, எங்க வீட்ல எம் மக கூட எம்.எல்.ஏ. பதவிய ராஜினாமா செய்யுங்கன்றா நானும் யோசிக் கிட்டிருக்கேன்யா என்றிருக்கிறார்.

இதனிடையே சென்னை செல்வதற்காக தூத்துக்குடி ஏர்போர்ட் வந்த தளவாயை சந்தித்த தூத்துக்குடியிலுள்ள அவரது ஆதரவாளர்கள், அண்ணே இந்த விஷயத்தில நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நாங்க உங்க பக்கம் நிப்போம்னு அணிவகுக்க, தளவாயோ குஷியோடு ப்ளைட் ஏறியிருக்கிறார். எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா, தளவாயின் முடிவு பற்றி அறிந்த எடப்பாடி சென்னை வந்த தளவாயைச் சந்தித்து அவரது முடிவை மாற்றும்படி வற்புறுத்த, சமாதானப்படுத்துவதற்காக, தனது சேலம் ஆதரவாளரான மா.செ. இளங்கோவை அனுப்பி வைத்துள்ளாராம்.

இதனிடையே எடுத்த பதவிகளை தளவாய் சுந்தரத்துக்குத் திரும்பக் கொடுத்தால் கட்சியில் எடப்பாடி உண்டான மரியாதையே போயிறும் செல்லாக்காசாயிறுவார் என்று கட்சியின் முக்கியப் புள்ளிகளே வார்த்தைகளை விடுகின்றனர். இதனால் இந்த விஷயத்தை எப்படி டீல் பண்ணுவது என்று புரியாமல் திணறுகிறாராம் எடப்பாடி. மோதிப் பார்க்கலாமா என்ற லெவலிலிருக்கிறாராம் தளவாய்.

இந்த கேப்பில் தளவாய் சுந்தரத்தை பொறுப்பிலிருந்து எடப்பாடி நீக்கியதை வரவேற்று தூத்துக்குடி நகர வழக்கறிஞர்கள் அணி நகரில் போஸ்டர்களை நிரப்பியுள்ளனர்.

பீடம் தெரியாமல் சாமியாடினால் இந்தக் கதிதான் என்கிறார்கள் இலை தரப்பினர்.
 

சார்ந்த செய்திகள்