புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின் சேதங்களை மதிப்பிட வந்த மத்திய ஆய்வுக் குழுவிடம் பல லட்சம் மரங்களையும், விளை நிலங்களையும் இழந்த விவசாயிகள் தங்களது வேதனையை வெளியிட்டு நிவாரணம் கோரினர்.
காஜா புயல் சேதத்தை மதிப்பிடுவதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய ஆய்வுக் குழு நேற்று மாலை புதுக்கோட்டையில் புயல் சேதங்களை ஆய்வு செய்யத் துவங்கியது.
புதுக்கோட்டையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த மத்திய ஆய்வுக் குழுவினர் நேற்று இரவு ஆய்வினை முடித்துக் கொண்டு தஞ்சை புறப்பட்டனர்.
அதன்படி நேற்று இரவு தஞ்சையில் தங்கிய டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய ஆய்வுக் குழு இன்று காலை தஞ்சை, ஒரத்தநாடு புதூர், புலவன்காடு, நெமிலி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்த உள்ளனர்.
அதன் பின்னர் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் கடற்கரையோர கிராமங்களில் புயலின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு முடித்த பின்னர் மத்திய ஆய்வுக்குழுவினர் திருவாரூர் மாவட்டத்திற்கு செல்ல விருப்பதாவும்,முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வினை முடித்தபின் இன்று மாலை வேதாரண்யம் சென்று ஆய்வு நடத்த உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.