தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் கூகுள் மீட் வழியாக நடைபெற்றது. செயற்குழுவில் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் நாயகம் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் மாநில நிர்வாகிகள் பன்னீர்செல்வம், முகேஷ், ஜெகதீஸ்வரன், ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என்று பேசினார்..
இச்செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, கரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தன்னுயிர் துக்கமென்ன நினைத்து களப்பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் மருத்துவம் சார்ந்த பணியில் ஈடுபடும் அனைத்துத்துறை ஊழியர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றியும் பாராட்டும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும். கரோனோ நோய் தொற்று தீவிரமடையும் அடைவதால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.கரோனா தடுப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 5000க்கு மேற்பட்டோர் மீது ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் போடப்பட்டுள்ள குற்ற குறிப்பாணைகள் (17B) நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் பணி மாறுதல் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விரோத நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டதை காரணம் காட்டி ஓய்வு பெறும் நாளன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோரின் பணியிடை நீக்கம் ரத்து செய்து முறையான பணி ஓய்வு ஆணை வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்தும் கிடைக்காத நிலையில் பின்னேற்பு விண்ணப்பித்துள்ள 5000 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்துவிட்டு பின்னேற்பு வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி காலத்தில் வழங்கப்படும் அனைத்து வகையான விலையில்லா பொருட்களையும் உடனடியாக வழங்க வேண்டும். என்.எம்.எம்.எஸ் மற்றும் என்.டி.எஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊர்திப்படியை மே மாதம் பிடித்த செய்யாமல் தொடர்ந்து வழங்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.