Skip to main content

சென்னையில் நடைபெற்ற மத்திய அரசுத் தேர்வு; மோசடியில் ஈடுபட்ட வெளிமாநில மாணவர்கள்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

Central Government Examination held in Chennai; Foreign students involved in fraud

 

சென்னையில் பாதுகாப்பு அமைச்சக பணிகளுக்கான தேர்வில் ப்ளூடூத் பயன்படுத்தியும் ஆள்மாறாட்டம் செய்தும் மோசடியில் ஈடுபட்ட வெளி மாநில மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

 

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ பப்ளிக் பள்ளியில் பாதுகாப்பு துறையின் சி பிரிவு பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது.  இத்தேர்வில் மொத்தம் 1728 பேர் எழுதினர். தேர்வில் ஹரியானா மாநிலம் சித் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 28 இளைஞர்கள் சிறிய அளவிலான ப்ளூடூத் கருவிகளை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு மாணவருக்கு பதில் வேறொருவர் தேர்வு எழுதியதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

 

இதனை அடுத்து மோசடியில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரையும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ப்ளூடூத் கருவிகளை பயன்படுத்தி தேர்வு எழுதியதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தனர் மற்றும் தேர்வுநடத்தும் அதிகாரிகளுக்கு இதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்