Skip to main content

பள்ளி மாணவிக்கு செல்போனில் செக்ஸ் டார்ச்சர்

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
பள்ளி மாணவிக்கு செல்போனில் செக்ஸ் டார்ச்சர்

பள்ளி மாணவிக்கு செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு செய்பவரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டுமென அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா தெய்வசெயல்புரம் கீழத்தெருவில் வசிக்கும் பட்டயக்காரன் என்பவரது மனைவி சூர்யா (32) என்பவர் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, நான் தெய்வசெயல்புரத்தில் வசித்து வருகிறேன். எனக்கு முத்துமாரி என்ற மகளும் (8ம் வகுப்பு ) மாரியப்பன் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் எல்லைநாயக்கன்பட்டியிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். நான் துப்புரவு வேலை செய்து வருகிறேன்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே எனது செல்போன் எண்ணில் அடிக்கடி தொடர்பு கொண்டு மர்ம நபர்கள், எனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார்கள். மிகவும் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் பேசுகின்றனர். ஒரு லட்ச ரூபாய் பணம் தர வேண்டும். இல்லையெனில் உன்முறை பையனுடன் உனக்கு திருமணம் நடக்க விட மாட்டோம் என்று கூறுகின்றனர். எனது உறவினர் ஆறுமுகத்தையும் செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்கின்றனர்.

இதனால் எனது மகளின் படிப்பும், அவளது எதிர்காலமும் பாழாகும் அபாயம் உள்ளது. எனவே காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்து செல்போனில் பாலியல் தொந்தரவு செய்யும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்து எனது மகளின் படிப்பினையும், எதிர்காலத்தினையும் பாதுகாக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்க்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

-செய்தி : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்