பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள மீனாட்சிபேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குமரவேல் என்பவர் 2.8.2017-ம் தேதி இரவு குறிஞ்சிப்பாடி இரயில்வே ஸ்டேசன் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மீனாட்சி நகர் பழனிவேல் மகன் சரத் (எ) சரத்குமார் (வயது 23 ) என்பவர் ராஜேந்தினை வழிமறித்து அசிங்கமாக திட்டி "நீதான் எனக்கு எதிராக சாட்சிகளை திரட்டி போலீசில் மாட்டிவிடுகிறாய்" என வீச்சரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துதுள்ளார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் தடுக்க முற்பட்ட போது அவர்களையும் வீச்சரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இவ்வழக்கில் குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் ராம்தாஸ் சரத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.
சரத் மீது குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ரவுடி பதிவேடு உள்ளது. மேலும் 5 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்கள் செய்து வருவதால் குற்ற செய்கையை கட்டுபடுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே சரத்தை குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் சரத் (எ) சரத்குமார் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டார்.
- சுந்தரபாண்டியன்