![Celebrities who participated in the opening ceremony of Ariyalur Medical College](http://image.nakkheeran.in/cdn/farfuture/ovRGIsE-3M-wWcewNzTyqKO4JC3ERdN4Kxm0tGfHKEU/1642050136/sites/default/files/2022-01/ariyalur-med-1.jpg)
![Celebrities who participated in the opening ceremony of Ariyalur Medical College](http://image.nakkheeran.in/cdn/farfuture/1nw4AofAnbH2yIRKmLEfH6ayG2wCOSjTl7_VOZXPhoE/1642050136/sites/default/files/2022-01/ariyalur-med-2.jpg)
![Celebrities who participated in the opening ceremony of Ariyalur Medical College](http://image.nakkheeran.in/cdn/farfuture/5mLYMh3npT3TgjmbcGEmtvE7qDpHqPwUt4Z31sH_nz4/1642050136/sites/default/files/2022-01/ariyalur-med.jpg)
Published on 13/01/2022 | Edited on 13/01/2022
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து நேற்று (12/01/2022) காணொளி காட்சி வாயிலாக ரூபாய் 4,080 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார். 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரியலூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஒன்றாகும்.
இந்நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி, காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.