Published on 17/07/2023 | Edited on 17/07/2023
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் பா.ம.க.வின் 35ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க. கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர், “பொது சிவில் சட்டம் என்பது தேவை இல்லாத ஒன்று. இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. அதில் பல மொழிகள், பல சாதிகள், பல இனங்கள், பல மரபுகள் இருக்கும். வடகிழக்கு பகுதி என்றாலே ஒரு கலவை உள்ள இடம் தான். சாதி என்பது ஒரு அழகிய சொல்லாகத் தான் நான் பார்க்கிறேன். ஆனால், சாதியால் வரும் பிரச்சனைகளை நாம் களையெடுக்க வேண்டும். சாதியால் வருகின்ற அடக்குமுறைகளை நாம் ஒழிக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்து இல்லை. அதே நேரத்தில் சாதியில் அழகான வழிமுறைகள் இருக்கின்றது” என்று கூறினார்.