Skip to main content

தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து ராமதாஸ், திருமாவளவன் விடுவிப்பு

Published on 26/09/2017 | Edited on 26/09/2017
தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து ராமதாஸ், திருமாவளவன் விடுவிப்பு

2011 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக பாமக நிறுவனர் இராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.வா.க தலைவர் வேல்முருகன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த விதிமீறல் வழக்கிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் விடுவித்து பண்ருட்டி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்