குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு:
குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு செப்டம்பர் 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுதத்து கொள்ளப்படுகிறது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் "தடை செய்யப்பட்ட பான்மசாலா விற்பனையில் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு உள்ள தொடர்புகளை விசாரிக்க சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். வருமான வரித்துறையால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’’.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு அதற்கு முன்பாகவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை அமர்வில் முறையிடப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த குட்கா விவகாரம் தொடர்பாக அவை உரிமம் குழு திமுக எம்எல்ஏளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் இந்த வழக்கை விரைவாக விசாரிக்க என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளவதாக தெரிவித்தார்.
- சி.ஜீவா பாரதி
செப்.7ல் விசாரணை..!