Skip to main content

ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு!

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

 Case filed against OPS!

 

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற கடந்த  ஜூலை 11 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல்நிலையத்தில், மோதலின் பொழுது முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், அச்சுறுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மோதல் காரணமாக இருதரப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்