ஆர்.எஸ்.பாரதியின் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக இன்று ஆர்.எஸ்.பாரதி அதிகாலையி
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் உட்பட 96 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ ரவிச்சந்திரன், ரங்கநாதன், ராஜா ஆகிய எம்எல்ஏக்கள் உட்பட 96 பேர் மீது நோய் தொற்று பரப்பும் செயலில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.