கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மழை வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துகொண்டு இருக்கிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் முழுதும் நிரம்பியுள்ளது. அப்படி நிரம்பும் நீர் சில பகுதிகளில் தரைப்பாலங்கள் வழியாக செல்கிறது. இதேபோல் பேகப்பள்ளியிலும் தரைப்பாலத்தில் நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. ஏற்கனவே தரைப்பாலம் வழியாக அந்த பகுதி பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்த நிலையில் இதை ஏதும் அறியாமல் அவ்வழியே காரில் சென்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நால்வரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த ராகேஷ் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். கூகுள் மேப்பை பயன்படுத்தி காரில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது பேகப்பள்ளி பள்ளி பகுதியில் அதிக அளவு வெள்ளம் சென்றதால் அறியாமல் வண்டியை செலுத்த கார் இழுத்துச் செல்லப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் காரில் இருந்த நன்கு பேரையும் பத்திரமாக மீட்டனர். சிறிது சேதமான நிலையில் காரும் மீட்கப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.