சென்னை போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே கார் நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கார்கள் பற்றி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. நேற்று பெங்களூருவில் விமான கண்காட்சியில் நடந்த தீ விபத்தை போன்று சென்னையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ராமச்சந்திரா மருத்துவமனை எதிரே ''ஊட்டோ'' என்ற கால் டாக்ஸி நிறுவனத்தின் கார்கள் நிறுத்திவைக்கும் இடத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 4 முதல் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு உள்ள அந்த இடத்தில் சுற்றியும் கழிவுகள் கொட்டப்படுவதால் அதில் பற்றிய தீயை சரியாக அணைக்காததால் மற்ற பகுதிகளுக்கு பரவி இறுதியில் கார் பற்றி எரிந்து வருகிறது. தற்போது 50க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இரண்டு வாகனங்களில் வந் தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார் தீப்பற்றி டயர்கள் வெடித்து சிதறியதால் அருகில் சென்று தீயை அணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவும், சவாலாகவும் உள்ளதாக தீயணைப்பு துறையினர் கூறினர். 2 தீயணைப்பு வாகனங்கள் மட்டுமே வந்திருப்பதால் தீயை அணைக்க போதுமான வசதியில்லாததாக பார்க்கப்படுகிறது.
தற்போது கார் நிறுத்தத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.