தேர்தல் என்றால் பணம் தான் பிரதானமாகிவிட்டது. சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் செலவுகளோடு ஒப்பிடும் போது, அந்த செலவெல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் செலவுகளோடு ஒப்பிடும்போது மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசத்தில் உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் பதவியாகட்டும், ஒன்றிய குழு உறுப்பினர் பதவியாகட்டும் வெற்றி என்பது வாக்கு வித்தியாசம் என்பது பெரிய வித்தியாசம்மெல்லம் இருக்காது. ஒரு ஓட்டில் கூட வெற்றி மாறும் என்பதால் வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியம் என்பதால் களத்தில் தீவிரமாக உள்ளார்கள்.
தினமும் வாக்காளர்களுக்கு சரக்கு, பிரியாணி, இரவில் டிபன் என ஒவ்வொரு ஊரில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் வாக்காளர்களை குஷிப்படுத்துகிறார்கள்.
பண நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், வாக்காளர்களுக்கு பொருள் தருவதை தடுக்கவும் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு பறக்கும்படை என 18 பறக்கும்படை அமைத்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். இந்த பறக்கும்படை உருவாக்கப்பட்டு சில நாட்கள் ஆன நிலையில் இதுவரை பறக்கும்படையினர் சோதனை நடத்தினார்கள் என எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அதுமட்டும்மல்ல சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் நடைபெறுவதைப்போல் இதுவரை எந்தயிடத்திலும் வாகன சோதனைக்கூட நடத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.