Skip to main content

'காத்திருப்போர் பட்டியலை ரத்து செய்க'-உறுதிமொழி சர்ச்சை தொடர்பாக மருத்துவர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம்! 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

'Cancel waiting list' - Letter to the President of the Medical Association regarding the pledge controversy!

 

மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில், அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவருக்கும், 'இப்போகிரேடிக் உறுதிமொழி' காலம் காலம் காலமாக அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தொடங்கிய காலத்திலிருந்து பின்பற்றி வரப்படுகிறது.

 

அரசு மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயலாகும் என தமிழக அரசு தெரிவித்திருந்ததோடு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

மேலும், தன்னிச்சையாக விதிமுறையை மீறி இப்போகிரேடிக் உறுதிமொழிக்குப் பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததிற்கு துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக்கல்வி இயக்குநர் மரு நாராயண பாபுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுடிருந்தார். அனைத்து மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் இனிவரும் காலங்களில் அனைத்துத்துறை தலைவர்களும் எப்பொழுதும் பின்பற்றப்படும் இப்போகிரேடிக் உறுதிமொழி இதையே தவறாது கடைப்பிடிக்க மருத்துவக் கல்வி இயக்குநர் மூலம் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

'Cancel waiting list' - Letter to the President of the Medical Association regarding the pledge controversy!

 

இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், 'தேசிய ஆணையத்தின் சுற்றறிக்கை படியே 'வைட் கோட் செர்மனி' சக்ரா சபதம் நிகழ்வு நடத்தப்பட்டது. மதுரையில் நடந்த நிகழ்வில் சக்ரா உறுதிமொழி ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது.  தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கை குறித்து அறிவுறுத்தல் எதுவும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து வரவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்