வேலைவாய்ப்பை பறிக்கும் அரசு ஆணை எண்:56-ஐ ரத்துசெய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதன்கிழமைன்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, அரிமளம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி எஸ்.சின்னத்துரை தலைமை வகித்தார். அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண்:56-ஐ ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி, சைக்கிள், இலவசப் பேருந்து பயண அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேசி போராட்டத்திற்கு தீர்வுகாண வேண்டும். அரசுப் பள்ளிகளைப் பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதே போல அரிமளத்தில் மாணவர்கள் பேரணி நடத்தி ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாகவும் அரசாணை 56 ரத்து செய்து இளைஞர்களுக்கு வேலை கொடு என்று முழக்கமிட்டனர்.