
தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டால், அவர்களுடன் கட்டிபிடித்து முத்தமா கொடுக்க முடியும்? என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அதிமுகவின் கூட்டணியை கட்டுரை எழுதுபவர் முடிவு செய்ய முடியாது, கட்சி தான் முடிவு செய்யும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும். ஒரு கட்டுரை எழுதப்பட்டதால் அதிமுகவில் கட்டுப்பாடு இல்லை என கூறுவது எற்புடையதல்ல.
தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டால், அவர்களுடன் கட்டிபிடித்து முத்தமா கொடுக்க முடியும்? தமிழத்தின் நலனே முக்கியம். தமிழக மக்களே முக்கியம். தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஒட்டு மொத்த எதிரியாக இருக்கும் யாராக இருந்தாலும் சரி அவர்களுடன் எப்படி உடன்பாடு வைத்துக்கொள்ள முடியும்? தமிழக மக்கள் ஏற்றுக்கொள்பவர்களுடன் தான் எந்த ஒரு உறவும் இருக்கும். அந்த உறவைக்கூட நிர்ணயிப்பது கட்சி தான்.
’கடல் வத்தி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வத்தி செத்த கதை’ தான் எனக்கு ஞாபகம் வருகிறது. இது பல ஊழலுக்கு சொந்தக்காரர் சாத்தான் வேதம் ஓதுவது போல் தான் இருக்கிறது. ஊழலுக்காகவே ஒரு ஆட்சி இந்தியாவிலே முதன் முதலாக கலைக்கப்பட்டது என்றால் அது திமுக தான். ஊழிலின் மொத்த உருவம் திமுகதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.