சனாதான தர்மம் பற்றிய ஆளுநரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
''வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம். ஆனால் சனாதன தர்மமும் அதையே கூறுகிறது. சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவால் தகர்க்கப்பட்டது இதிலிருந்தே சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம்'' என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். இந்நிலையில் சனாதன தர்மம் குறித்த தமிழக ஆளுநரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''சனாதனத்திற்கு ஆதரவாக அவர் பேசுவது என்றால் பேசலாம். ஆனால் அதற்கு அவரது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேச வேண்டும். பதவியை ராஜினாமா செய்துவிட்டு சனாதனத்திற்கு ஆதரவாக மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவா பேசலாம், பாஜகவின் செய்தித் தொடர்பாளராகவோ அல்லது கொள்கை பரப்பு செயலாளராகவோ செயல்படலாம்'' என்றார்.