நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆளும் அதிமுக ஆட்சியை தக்கவைக்க கடும் முயற்சியில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதேபோல எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மாற்றும் முயற்சியில் திமுகவும், ஆட்சியை அகற்றும் முயற்சியில் அ.ம.மு.க.வும் களம் காண உள்ளது. இந்த இடைத் தேர்தல் மூன்று அணிகளுக்கும் முக்கியமான தேர்தலாக உள்ளது. திமுக பட்டியலை மாலை வெளியிட்ட நிலையில் இரவில் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
தஞ்சை, சட்டமன்றத் தொகுதி 2016 பொதுத் தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு 3 வது முறையாக தேர்தல் களம்காண்கிறது. முதல் முறை அதிமுக பணப்பட்டுவாடாவில் கையும் களவுமாக பிடிபட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. தற்போது திமுக வேட்பாளராக தஞ்சை மாநகரச் செயலாளர் நீலமேகம் அறிவிக்கப்பட்டுள்ளார். டி.ஆர். பாலு அணியை சேர்ந்தவர்.
அதிமுக வேட்பாளர் காந்தி பால்வளத்துறை தலைவராக உள்ளார். சொந்த ஊர் ஒரத்தநாடு பக்கம். வைத்திலிங்கத்திற்கு எல்லாமாக இருந்து வளர்ந்தவர். தற்போது வைத்திலிங்கம் தயவில் இடம் கிடைத்துள்ளது.