Skip to main content

2019க்குள் இந்தியாவில் மாபெரும் மாற்றம் கொண்டு வரப்படும்: பொன்.இராதகிருஷ்ணன் பேட்டி!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
2019க்குள் இந்தியாவில் மாபெரும் மாற்றம் கொண்டு வரப்படும்: பொன்.இராதகிருஷ்ணன் பேட்டி!



2019க்குள் இந்தியாவில் மாபெரும் மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய இணைஅமைச்சர் பொன்.இராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூய்மை பாரதம் நிகழ்சிக்காக மதுரை சிம்மக்கல் வ.உ.சி சிலை பகுதியில் மத்திய  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வ.உ.சி சிலை சுத்தம் செய்துவிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;

130 கோடி மக்களும் அன்றாடம் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். நமது நாடு தூய்மை நாடாக விளங்க வேண்டும் என்கிற அடிப்படையில் பிரதமர் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள். 2019க்குள் இந்தியாவில் மாபெரும் மாற்றம் கொண்டு வரப்படும். டாயாரிய நோய் காரணமாக நாட்டில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். பிரதமரால் தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் மக்கள் திறந்தவெளி கழிப்பிடஙகளை தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- ஷாகுல் 

சார்ந்த செய்திகள்