










சாமானியர்களின் முக்கிய போக்குவரத்து சாதனமான பேருந்து இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளது. அனைத்து பேருந்துகளும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் காலை முதல் இயங்க துவங்கியது.
மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் வேலைக்கு செல்லும் மக்களால் அதிகம் பயணிக்க முடியாமல் இருந்தது. பேருந்து தாண்டி ஆட்டோக்கள் ஓடினாலும் தனிமனித இடைவெளி பொருளாதார சூழ்நிலையின் காரணமாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் தின வருமானம் ஈட்டுவோர் அதிகம் பயணிக்க முடியாமல் இருந்தது.
அதன் காரணமாக இந்த நான்காம் கட்ட தளர்வில் பேருந்து இயக்கம் என்பது மிக முக்கிய அறிவிப்பாக பார்க்கப்பட்டது. ஒவ்வொரு செயல்பாடுகளிலும் தனி தனி வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ள தமிழக அரசு, பேருந்து இயக்கத்திற்கு மக்கள் பின் படிக்கட்டுகள் வழியாக பேருந்துக்குள் ஏற வேண்டும் என்றும், ஏறும்போதே அங்கு வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினையை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், மேலும் இறங்கும்போது முன் பக்க படிகட்டுகளில் இறங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி குறிப்பாக அனைத்து பேருந்துகளும் ஐம்பது சதவீத பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.