தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் அதிமுகவில் இணைய வருமாறு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கவிதை ஒன்று வெளியாகி உள்ளது. அதில்,
வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் அதிமுக நிழலில் ஒதுங்க ஜெயலலிதா ஆன்மா அனுமதிக்காது என சசிகலா குடும்பத்தினர் பற்றி மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்மா விரும்பாதது அண்ணா திமுகவில் அணுவளவும் அரும்பாது என்பதையும் நீதிமன்றத் தீர்ப்பாக நிகழ்காலம் சொன்னது என 18 எம்.ஏல்.ஏக்கள் வழக்கு தீர்ப்பு குறித்து கூறப்பட்டுள்ளது.
பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பரிவட்டம் சூடியோர் பாசத்தாயின் இயக்கத்தை விட்டு தாய் வெறுத்த கூட்டத்திடம் தஞ்சமைடந்து தவறிழைக்க’என ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரது பரிந்துரையால் வெற்றிப் பெற்றவர்கள், அவர் வெறுத்த கூட்டத்திடம் தஞ்சமடைந்து தவறிழைத்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்துவிட்டனர்.
’இன்று அவர்கள் அம்மா கொடுத்த எம்.எல்.ஏ பதவியை இழந்தவராகி பரிதவிப்பில் கிடக்க ’ 18 பேரும் பரிதவித்து கிடக்க ஜெயலலிதாவால் வெறுக்கப்பட்டவர் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார் என்றும் ’இந்த நரி சூழ்ச்சியை உணர்வதும் அம்மாவின் சூளுரையை உதிர்த்து உணர்வாக்கி ஒன்றாக்கி எழுவதும் தான் நன்றி கொண்டோர் காரியம்’ என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் மீண்டும் இணைய வருமாறு மறைமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.