அதிமுக, திமுக கூட்டணிகளில் சொந்த தொகுதி வேட்பாளர்களை நிறுத்துவதைவிட தொகுதி மாற்றி நிறுத்தப்பட்டுள்ளது அனைத்துக் கட்சியிலும் உள்ளது. ஆனால் தொகுதியை இழந்த புதுக்கோட்டை மக்களுக்கு ஆறுதலாக திருச்சி தொகுதியில் மட்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் திருநாவுக்கரசரும் அமமுக சாருபாலா தொண்டைமானும் நிறுத்தப்பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளில் மற்ற மாவட்ட வேட்பாளர்களே போட்டி யாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் தான் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணியில் சேலத்திலிருந்து தேமுதிக வேட்பாளராக டாக்டர் இளங்கோவனை தேர்வு செய்து அழைத்து வந்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். முதல் நாள் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே நான் அமைச்சர் போல ஏமாளி என்று சொன்னார் இளங்கோவன். இந்த நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார்கள்.
அந்த கூட்டத்தில் பேசிய வேட்பாளர் இளங்கோவன், வேட்புமனு என்னது.. ஆனா வேட்பாளர் நான் இல்ல என்றார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயlல்படுத்துவேன் இல்லன்னா ராஜினாமா செய்வேன் என்றெல்லாம் பேசினார்.
அதே கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஈழத்தமிழர் பிரச்சனைக்கு காங்கிரஸ் திமுக தான் காரணம். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றவர், எல்லாரும் கேமராவை ஆஃப் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி தலைவர்களையும் வேட்பாளர்களையும் குற்றம் சொல்லியே பேசி முடித்தவர் வெளியே வரும் போது மீடியா நண்பர்களை அழைத்து.. வீடியோ எடுக்காதீங்கன்னு சொன்னதுக்கு தப்பா எடுத்துக்காதீங்க.. வெளியூர் வேட்பாளர்களை நம்ம மக்கள் ஏற்கல.. கொஞ்சம் மந்தமா இருக்காங்க. அதனால அவங்களை உற்சாகப்படுத்த தான் அப்படி பேசினேன் என்றார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த ர. ர. க்கள் சிலர்.. மாவட்டத்துல இருக்கிற அதிமுக நிர்வாகிகளையே கூட்டத்துல காணும் அழைப்பு இல்ல.. அப்பறம் எப்படி உற்சாகமா வேலை செய்வாங்க. வீடியோ வெளியானா அமைச்சர் பேச்சுக்கு எதிர் பேச்சா அவரோட வழக்குகள் பற்றி எல்லாம் பேசுவாங்களே அதனால தான் எதிர் கட்சியினரை வசை பாடியதை வெளியே விடவேண்டாம்னு சொல்றார். எப்படி எங்க அமைச்சரின் தந்திரம் என்று சிரித்தனர்.