
காரைக்குடியிலிருந்து திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் கோவில்களுக்கு 15 பேர் கொண்ட குழுவினருடன் வேன் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வந்துகொண்டிருந்த போது மழை காரணமாக நிலைதடுமாறியது.

இதனால் அதன் பின்னால் நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்து வேனின் பின்பகுதியில் லேசாக மோதியது. இதனால் வண்டியை நிறுத்தியவர்கள் சாலையிலேயே வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இவ்வேளையில், நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு ஒரு அரசு பேருந்து நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

மூன்று வாகனங்களும் அடுத்தடுத்து மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததால் பேருந்தின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர், வேன் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்த 18 பேர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த பிரதீப் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த தவசிமுத்து ஆகிய இருவர் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.