கடலூர் அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண் சுத்தியல் மற்றும் கல்லால் அடித்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் கார்மாங்குடியை சேர்ந்த ஸ்ரீதர் என்ற இளைஞர் குறிஞ்சிப்பாடி சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி வந்தார். அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஸ்ரீதர் விருப்பம் தெரிவித்த நிலையில் அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனிமையில் பேசவேண்டும் என வெள்ளாற்றங்கரைக்கு அந்த பெண்ணை ஸ்ரீதர் அழைத்துச் சென்று கையில் மறைத்து வைத்திருந்த சுத்தியால் தாக்கியதோடு அங்கிருந்த கற்களால் கொடூரமாக தாக்கியுள்ளார். அந்த வழியாக வந்த நபர்கள் காயங்களுடன் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீதரை கைது செய்தனர்.