தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோவில்களில் நடைபெறும் திருமணங்களில், 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை. கோவிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. ஒதுக்கீடு செய்யப்படும் நேரத்தில் மட்டுமே திருமண நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். திருமண விழாக்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.