ஆப்பிளுக்கு இணையாக விற்கப்பட்டுவந்த ஒரு கிலோ தக்காளியின் விலை தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியது. தக்காளி வரத்து அதிகரிப்பு, பண்ணை பசுமைக் கடைகளில் விற்பனை காரணமாக தக்காளி விலை குறைந்தது.
கோயம்பேட்டில் நேற்று (24/11/2021) 30 லாரிகளாக இருந்த தக்காளி வரத்து இன்று 45 லாரிகளாக உயர்ந்துள்ளதாகக் கூறும் வியாபாரிகள், வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை ரூபாய் 30 குறைந்தது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் ரக தக்காளி ரூபாய் 110இலிருந்து ரூபாய் 80 ஆகவும், இரண்டாம் ரக தக்காளி ரூபாய் 100இலிருந்து ரூபாய் 70 ஆகவும் குறைந்துள்ளது.
அதேபோல், கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.