இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருக்கும் பாடிகிராஃப்ட் கிளினிக் & சலோன் தற்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அழகை மேம்படுத்துவற்கு உயர்தர சிகிச்சைகள் மற்றும் தீர்வு தரப்படுவதாக ஈடுபட்டுள்ளது. இதன் பிசினஸ் தலைவர் சித்தார்ட் நாயர் பேசுகையில், “பல்வேறு துறைகளின் கனவுகள் மற்றும் சாதனைகளின் பூமியாக சென்னை விளங்குகிறது. முறையான கண்காணிப்பு மற்றும் அனுபவத்தின் கீழ் தங்களது தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான வரப்பிரசாதம் இது.
இதற்காகவே, பாடிகிராஃபிட்டில் நாங்கள் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் திறமையான பணியாளர்களைக் கொண்டுள்ளோம். அவர்கள் தோற்றத்தை மேம்படுத்துவதிலும், முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை முழுமையுடன் மேம்படுத்துவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள். சென்னை எங்களுக்கு ஒரு சிறப்பு அடையாளமாக இருக்கப் போகிறது. மேலும் பல ஆர்வமுள்ள ஒப்பனையாளர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்களுக்கு நாங்கள் வேலை வாய்ப்புகளைத் தர இருக்கிறோம்” என்றார்.