Skip to main content

 திருவாரூர் வரும் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம்; பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
ban

 

 ஹைட்ரோகார்பன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதியளித்த மத்திய அரசிற்கு எதிர்ப்பு  தெரிவித்து 3 ம் தேதி திருவாரூர் வருகை தரும் தமிழக ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பி.ஆர்.பாண்டியன்  தெரிவித்துள்ளார்.

 

திருவாருரில் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் அவரசர கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் எடுப்பதற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் மத்திய அரசு  இன்று கையெழுத்திடுவதற்கு விவசாயிகள் சார்பில்  கண்டனமும் எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது.

 

கூட்டத்தின் முடிவில் அனைத்து விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ‘’மத்திய அரசு ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் வேளாண் மண்டலமாக உள்ள காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடும். இந்த திட்டங்களை செயல்படுத்த கூடாது. எனவே விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை மத்திய அரசிற்கு தெரிவிக்கும் வகையில் வருகிற அக்டோபர் 3ஆம்  தேதி திருவாரூருக்கு வருகை தரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு  தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போரட்டத்தில் விவசாயிகள் ஈடுபடவுள்ளோம்.

 

தமிழக அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 70 ரூபாயும், சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு 50 ரூபாயும் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. தமிழக அரசு நெல்லின் ஊக்கத் தொகையாக குவிண்டால் ஓன்றுக்கு ரூ.400 ஆக உயர்த்தி வழங்கினால் மட்டுமே விவசாயிகளை பாதுகாக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்