தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடி ASA திருமண அரங்கத்தில் மாவட்ட செயலாளர் சேரன்குளம் சு.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
மன்னார்குடி ஒன்றிய செயலாளர் பி.கே.கோவிந்தராஜ் வரவேற்றார். பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தஞ்சை மண்டல தலைவர் டி.பி.கே.இராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோம.தமிழார்வன், மாவட்ட தலைவர் எம்.சுப்பையன் நகர தலைவர் தங்கமணி உள்ளிட்ட அனைத்து ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றனர்.
மார்ச் 6ல் சென்னை கவர்னர் முற்றுகைப் போராட்டத்தில் ஒன்றியத்திற்கு தலா 50 விவசாயிகள் பங்கேற்பது என தீர்மாணிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துக் கொண்ட பின் பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ..
iதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி பிரச்சினையில் அவ்வபோது அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியும், தேவைகேற்ப எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினோடு கலந்து பேசியதின் அடிப்படையில் பிரதமர் மோடி தமிழக தலைவர்களை சந்தித்து பேச அனுமதி மறுத்துள்ளார் எனவும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்க சொல்வதை ஏற்க முடியாது என்றும் திரு மு .க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதன் பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது ஸ்டாலின் பிரதமர் சந்திக்க மறுத்தார் என்பதை ஏற்க மறுக்கிறோம் என்றும் கட்கரியை முதலில் சந்திக்க சொன்னார் என்றார்.
இருவரின் கருத்தும் பிரதமர் சந்திக்க மறுப்பதை தான் காட்டுகிறது.
தமிழக அரசு அனைத்து கட்சி கள் ஒன்றினைந்து காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் ஒத்த கருத்தோடு செயல்படுவதை பிரிக்க பா.ஜ.க வும் மத்திய அரசும் முயற்சிக்கிறது. இதற்கு இடமளித்து விடக் கூடாது.
பிரதமர் மோடி தமிழக தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி மறுப்பதை கண்டித்தும், உடன்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் காவிரி பாசனப் பகுதி பகுதிப்புகளையும், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அவசியத்தையும் பிரதமரிடம் எடுத்துக் கூறி தமிழக அனைத்துக் கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பதற்க்கு அனுமதி பெற்றுத் தர வலியுறுத்தியும் மார்ச் 6ல் கவர்னர் மாளிகையை ஆயிரக்கணக்கான விவசாயிகளோடு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபL உள்ளோம் என்றார்.